மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் அமைதியற்ற சூழலால் உலக சந்தையில் நிச்சயமற்ற நிலை காணப்பட்ட போதிலும், அடுத்த இரண்டு மாதங்களுக்கு தடையின்றி எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்வதற்கான திட்டங்களை அரசாங்கம் ஓரளவு முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார்.
உலகளாவிய மாற்றங்களுக்கு ஏற்ப எரிபொருள் விலைகள் அதிகரிக்கலாம் அல்லது குறையலாம் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, தான் ஒன்றும் எண்ணெய் கிணறு உரிமையாளர் அல்ல என்றும், தனிப்பட்ட லாபத்திற்காக விலைகளை அதிகரிக்கவில்லை என்றும், தான் எந்தவொரு எண்ணெய் நிறுவனத்தினதும் ஏஜென்ட் கிடையாது என்றும் வலியுறுத்திக் கூறினார்.