By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: நானாட்டானில் மண் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களால் வீதிகள் சேதம்- மக்கள் குற்றச்சாட்டு!
Share
Notification
Latest News
யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!
யாழ்ப்பாணம்
தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!
வன்னிச் செய்திகள்
வேலணை பிரதேச பண்பாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.
தீவகச் செய்தி
நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!
நெடுந்தீவு
ஈரான் – இஸ்ரோல் இடையே போர் நிறுத்தம் !
உலகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > வன்னிச் செய்திகள் > நானாட்டானில் மண் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களால் வீதிகள் சேதம்- மக்கள் குற்றச்சாட்டு!
வன்னிச் செய்திகள்

நானாட்டானில் மண் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களால் வீதிகள் சேதம்- மக்கள் குற்றச்சாட்டு!

Last updated: 2023/03/28 at 7:54 AM
Published March 28, 2023 220 Views
Share
2 Min Read
SHARE
மன்னார்- நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள  மடுக்கதை கிராமத்தில் அகழப்படும் மண் ஸ்திரத்தன்மை அற்ற  வீதிகளூடாக கனரக   வாகனங்களில் ஏற்றிச் செல்வதால் வீதிகள், சிறிய பாலங்கள்,  சேதமடைந்து போக்குவரத்துக்கு உதவாவாமல்  அவ்வழியாக   செல்லும் பாடசாலை மாணவர்கள், பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள், நோயாளிகள், என பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாக  மடுக்கரை மற்றும் இராசமடு கிராம மக்கள்  குற்றஞ்சுமத்துகின்றனர்.
மேலும் பல வருடங்களாக அபிவிருத்தி எதுவும் காணாத குறித்த வீதி தற்போது புதிதாக அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போதே இவ்வாறு ஒரு நாளைக்கு அளவு கணக்கில்லாத வாறு கனரக வாகனங்கள் அதிக பாரத்துடன் சென்றால் புதிய வீதி தாங்குமா? என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

மேலும் மண் ஏற்றிச் செல்ல அனுமதி வழங்கப்பட்டது ஒரு பாதை. ஆனால் அவர்கள் அந்த பாதை ஊடாக செல்வதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால்  அவர்கள் மடுக்கரை இராசமடு பாதையை சேதப்படுத்துவதாக தெரிவிக்கின்றார்கள்.

மேலும் இவ்வாறு பொருளாதார நெருக்கடியான நேரத்தில் அரசாங்கம் வீதிகளை அபிவிருத்தி  செய்து கொண்டு போக மறுபுறம் அதே அரச அதிகாரிகள் முறையற்ற அனுமதிப் பத்திரங்களால் வீதிகளை நாசப்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.

குறித்த அதிகாரிகள் ஓய்வு பெற்று அல்லது மாற்றலாகிச் சென்று விடுவார்கள்.  ஆனால் சேதப்படுத்தப்பட்டு குண்றும் குழியுமான  வீதிகளுடன் அவஸ்தைப் படப் போவது   மக்கள்.  இதை அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும் என அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த வீதிகளினால்   கனரக வாகனங்கள் மண் ஏற்றிச் செல்வது தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு தெரிவித்தும் அதிகாரிகள் மண் மாபியாக்கள் பக்கம் சார்ந்து நின்று தவறுகளை  நியாயப் படுத்துகிறார்களே தவிர பொது மக்களுக்கு ஆதரவாக பேச மறுக்கிறார்கள்  என  மக்கள்  குற்றம் சுமத்துகின்றனர்.

அத்துடன் குறித்த பாதைகளூடாக  மண் ஏற்றிச் செல்பவர்களுக்கும் பொது மக்களுக்கும் ஏதேனும் கைகலப்புகள் பிரச்சனைகள் ஏற்பட்டால் உரிய அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் என்றார்கள்.
அத்துடன் 5 வருடங்கள் ஆட்சி செய்த நானாட்டான் பிரதேச சபை பிரதேச சபை அரசியல் நிர்வாகத்தினர் ஒவ்வொரு வீதிகளிலும் எவ்வளவு பாரம் ஏற்றிச் செல்ல வேண்டும் என்ற அறிவித்தல் பலகைகள் எதுவும் அமைக்கவில்லை.

வீதிகள் ஒவ்வொன்றும்  பிரதேச சபைக்கு சொந்தமானதாக இருக்கலாம், நீர்ப்பாசனம், விவசாயத் திணைக்களம், வீதி அபிவிருத்தி அதிகார சபை, அல்லது திணைக்களத்திற்கு சொந்தமானதாக இருக்கலாம், அது எமக்குத் தேவையில்லை இவை பொது மக்களின் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்ட வீதிகள்.

 அதை பாதுகாப்பது ஒவ்வொரு அரச அதிகாரிகளின் கடமை. எனவே குறித்த வீதிகள் ஊடாக கனரக வாகனங்கள் மண் ஏற்றிச் செல்வதை உடனடியாக தடுத்து நிறுத்தி   பொதுமக்களுக்காக வீதிகளை பாதுகாப்பதற்கு  அதிகாரிகள் முன்வர வேண்டும் .குறிப்பாக  நானாட்டட்டான் பிரதேச செயலாளர், மன்னார் மாவட்டச் செயலாளர்,  மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் அவர்கள் இந்த விடயத்தில் கரிசனை கொண்டு பொதுமக்களுக்கு சார்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்

You Might Also Like

தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!

வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!

முல்லைத்தீவில் கடலுக்கு சென்ற மீனவர் மாயம்-படகு மீட்பு !

“பிடியளவு கமநலத்திற்கு” தேசிய நிகழ்ச்சித் திட்டம் கிளிநொச்சியில்!

மனிதாபிமான கண்ணிவெடியகற்றல் பணியாளர்கள் கெளரவிப்பு.

ஒரே வாக்கு வித்தியாசத்தில் வெற்றி – வவுனியா மாநகரசபை சங்குக்கு

கண்டாவளை சட்டவிரோத மணல் அகழ்வு – கட்டுப்படுத்த அமைச்சர் குழு களவிஜயம்.

Anarkali March 28, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article வான் மரத்துடன் மோதி சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!
Next Article ஊர்காவற்றுறையில் நோயாளர்களுக்கு மருந்து வகைகள் அன்பளிப்பு!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!
தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!
வேலணை பிரதேச பண்பாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.
நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

You Might Also Like

வன்னிச் செய்திகள்

தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!

June 24, 2025
வன்னிச் செய்திகள்

சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!

June 23, 2025
வன்னிச் செய்திகள்

வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!

June 22, 2025
வன்னிச் செய்திகள்

முல்லைத்தீவில் கடலுக்கு சென்ற மீனவர் மாயம்-படகு மீட்பு !

June 19, 2025
வன்னிச் செய்திகள்

“பிடியளவு கமநலத்திற்கு” தேசிய நிகழ்ச்சித் திட்டம் கிளிநொச்சியில்!

June 19, 2025
வன்னிச் செய்திகள்

மனிதாபிமான கண்ணிவெடியகற்றல் பணியாளர்கள் கெளரவிப்பு.

June 18, 2025
வன்னிச் செய்திகள்

ஒரே வாக்கு வித்தியாசத்தில் வெற்றி – வவுனியா மாநகரசபை சங்குக்கு

June 16, 2025
வன்னிச் செய்திகள்

கண்டாவளை சட்டவிரோத மணல் அகழ்வு – கட்டுப்படுத்த அமைச்சர் குழு களவிஜயம்.

June 14, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?