நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 10 சதவீதத்தினர் பல்வேறு வகையான மனநோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
அவற்றில், சுமார் இரண்டு சதவீத மக்கள் கடுமையான மனநோய்களால் அவதிப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
உலக மனநல தினத்தை முன்னிட்டு நேற்று (ஒக். 08) நடைபெற்ற தேசிய விழாவில் உரையாற்றிய அவர், இத்தகைய மனநலப் பிரச்சினைகள் நாட்டில் தற்கொலை சம்பவங்களிலும் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.