நாடுவிட்டு நாடு வந்து பணியாற்றும் இந்திய மீட்பு வீரர்கள் – இலங்கை மக்களின் மனதில் !!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கடும் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களை மீட்கும் பணியில், நாடுவிட்டு நாடு வந்து, சேற்றிலும் வெள்ளத்திலும் உயிரை பணயம் வைத்து போராடி வரும் இந்திய மீட்பு வீரர்களும், மீட்பு நாய்களும் இன்று இலங்கை மக்களின் மனதில் ஆழ்ந்த மரியாதையை பெற்றுள்ளனர்.

வாழ்வும் மரணமும் நடுவே சிக்கிய அப்பாவி மக்களை கண்டுபிடித்து மீட்க,இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் (NDRF) மற்றும் K9 மீட்பு பிராணிகள், 24 மணி நேரமும் ஓய்வின்றி பணியாற்றி வருகின்றனர்.

இந்த வீரர்களின் தன்னலமற்ற சேவை, இலங்கை – இந்திய நட்புறவின் உண்மையான அர்த்தத்தை உலகிற்கு உணர்த்துவதாக பொதுமக்கள் உணர்ச்சிப்பூர்வமாக தெரிவித்து வருகின்றனர்.

Share this Article