நாடாளுமன்றில் சிறப்பாக செயற்பட்ட சிறீதரன் எம். பி. !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நாடாளுமன்ற அமர்வுகளில் சிறப்பாக செயற்பட்ட எம்பிக்களின் தரவரிசைவெளியீட்டில், முதல் 15 இடத்திற்குள் ஒரு தமிழ் எம்.பியாக நாடாளுமன்றஉறுப்பினர் சி. சிறீதரன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

2020 தொடக்கம் 2024 வரையான கடந்த நாடாளுமன்றில், 52 தமிழ் பேசும்உறுப்பினர்கள்; தமிழ், முஸ்லீம் மக்களின் பிரதிநிதிகளாக தெரிவுசெய்யப்பட்டிருந்தனர். இவர்களில் சிறப்பாக செயல்பட்டவர்களில், முதலாவது தமிழ் எம்பியாக சிறீதரன்தெரிவுசெய்ப்பட்டுள்ளார்.

சிறீதரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் 2010 நாடாளுமன்றத்தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு 10,057 விருப்புவாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

மேலும், 2015 தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு யாழ்ப்பாணம் தேர்தல்மாவட்டத்தில் அதிகப்படியான விருப்பு வாக்குகளை (72,058) பெற்று மீண்டும்நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.

தொடர்ந்து 2020 பொது தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிட்டுமீண்டும் வெற்றி பெற்றிருந்தார்.

Share this Article