இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபம் (சிபெட்கோ) நேற்று (ஒக்ரோபர் 1) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள்களின் விலைகளை அதிகரித்துள்ளது.
92 ஒக்டேன் பெற்றோர் லிற்றர் ஒன்றுக்கு 4 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 365 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
95 ஒக்டேன் பெற்றோல் 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 420 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஓட்டோ டீசல் லீற்றர் ஒன்றுக்கு 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 351 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 62 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 321 ரூபாவாக அநிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 11 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 242 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.