எரிபொருள் விலைகளை இன்று (மார்ச்31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும்வகையில் திருத்த இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கைஎடுத்துள்ளது.
309.00 ரூபாயாக இருந்த 92 ஆக்டேன் பெட்ரோல் லிட்டர் ஒன்றின் விலை10.00ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 299.00 ரூபாவாகும்.
அதேபோல், ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றரின் விலை 10.00 ஆல்குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 361.00 ரூபாவாகும்.
ஏனைய எரிபொருட்களின் விலைகள் மாற்றமின்றி தொடரும் என்றும்பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஒரு லிட்டர் லங்கா ஒயிட் டீசலின் விலை ரூ. 286 ஆகவும், லங்காசூப்பர் டீசலின் ஒரு லிட்டரின் விலை ரூ. 331., மேலும், ஒரு லிட்டர்மண்ணெண்ணெய் விலை 183 ரூபாய் ஆகவும் மாற்றமின்றி இருக்கும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை IOC, சினோபெக் நிறுவனங்களும் எரிபொருள் விலைகளைநிர்ணயத்துள்ளதுமை குறிப்பிடத்தக்கது.