நயினாதீவு மத்திய விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் இன்றையதினம்(ஒக். 25) நயினாதீவில் குருதிக் கொடை வழங்கும் நிகழ்வு
நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் யாழ்- போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டது.

நடைபெற்ற மாபெரும் இரத்ததான முகாமில் நயினாதீவு மத்திய விளையாட்டுக் கழகத்தின் உறுப்பினர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலர் இவ் உயிர் காக்கும் உன்னத பணிக்கு ஒத்துழைப்பு நல்கிய இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த உயரிய மனிதாபிமானச் செயலில் தங்களின் அரிய நேரத்தை ஒதுக்கி, உயிர் காக்கும் புனித பணியில் கலந்து கொண்ட அனைத்து குருதிக் கொடையாளர்களுக்கும், இதற்கான அனுமதியினை வழங்கிய யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி மற்றும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவினர், , நயினாதீவு பிரதேச வைத்தியசாலை பணியாளர்கள், அனுசரணையாளர் நயினை அமரர் சி. ஜெகநாதன் குடும்பத்தினர் (கனடா) ஆகியோருக்கு ஏற்பாட்டாளர்கள் நன்றி பாராட்டியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.