By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத் திருவிழா தொடர்பில் முன்னாயத்த கலந்துரையாடல்!
Share
Notification
Latest News
செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !
யாழ்ப்பாணம்
வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!
யாழ்ப்பாணம்
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!
யாழ்ப்பாணம்
நயினாதீவு நாகபூஷணியின் கொடியேற்றம் நாளை!
தீவகச் செய்தி
யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > தீவகச் செய்தி > நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத் திருவிழா தொடர்பில் முன்னாயத்த கலந்துரையாடல்!
தீவகச் செய்தி

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத் திருவிழா தொடர்பில் முன்னாயத்த கலந்துரையாடல்!

Last updated: 2024/05/23 at 8:09 PM
Published May 23, 2024 349 Views
Share
2 Min Read
SHARE

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத் திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் மாவட்ட பதில் அரசாங்க மருதலிங்கம் பிரதீபன் தலைமையில்  மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (மே 23) நடைபெற்றது.

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத் திருவிழா எதிர்வரும் ஜீன் 07 ம் திகதி தொடக்கம் ஜீன் 22 வரை நடைபெறவுள்ளதோடு அனைத்து பக்தர்களும் சிறப்பான முறையில் எந்தவித இடையூறும் இல்லாமல் அம்பாளை தரிசிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த கலந்துரையாடல் ஒழுங்குபடுத்தப்பட்டது.

இக் கலந்துரையாடலில் திருவிழாக் காலங்களில் வழமைபோல் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து குறிகட்டுவான் வரையிலான இலங்கை போக்குவரத்து சேவை மற்றும் தனியார் பஸ் சேவைகளின் ஒருவழிக் கட்டணம் 187 ரூபா என தீர்மானிக்கப்பட்டது.

இதேவேளை குறிகட்டுவானில் இருந்து ஆலயம் செல்வதற்கான படகு போக்குவரத்து ஒரு வழிக் கட்டணம் 80 ரூபாய் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

அத்தோடு கடற்போக்குவரத்து நேரத்திற்கமைய தனியார் போக்குவரத்து மற்றும் இலங்கை போக்குவரத்து பேருந்து சேவை காலை 6 மணி தொடக்கம் மாலை 7.30 மணிவரையிலும்  நடைபெறவுள்ளது.

கடற்போக்குவரத்தில் ஈடுபடும் படகு உரிமையாளர்கள்,படகுகளை உரியமுறையில் பேணுவதுடன் படகில் ஏற்றிச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துதல் மற்றும் பயணிகளுக்குரிய வசதிகள் இல்லாத படகுகளை சேவையில் ஈடுபடுவதை தவிர்த்தல் வேண்டும்.

ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள கள் விற்பனை நிலையம் திருவிழாக்காலத்தில் பூட்டப்படுமெனவும் தீர்மானிக்கப்பட்டது. மேலும் திருடர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த பொலிஸ் உத்தியோகத்தர்களை பாதுகாப்பில் ஈடுபடுத்தலுடன் வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகளின் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்த பிரதேச சபையினால் அடையாள அட்டைகள் வழங்கப்படுதல் வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டது.

அத்தோடு குறிக்காட்டுவான் வீதி குன்றும் குழியுமாக உள்ளமையினால் அதனை சீர்செய்வது தொடர்பாகவும், சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் சேவை, பொலிஸ் பாதுகாப்பு, கடற்போக்குவரத்தில் பாதுகாப்பு அங்கிகளை அணிவதை உறுதிப்படுத்தல், பாடசாலை மாணவர்களின் சாரணர் தொண்டர் சேவை, தரை மற்றும் கடற்போக்குவரத்து நேர அட்டவணையை காட்சிப்படுத்தல், மின்இணைப்பு, யாசகம் பெறுவோர் உள்வருவதை கட்டுப்படுத்தல், நடமாடும் வைத்திய சேவை, சுகாதாரம் மற்றும் குடிநீர் தேவை, மின்சாரத்தேவை, அமுதசுரபி அன்னதான ஒழுங்குகள், அம்புலன்ஸ் சேவை மற்றும் புனரமைக்கவேண்டிய வீதிகள் உள்ளிட்ட விடயங்கள் விரிவாக கலந்துரையாடப்பட்டன.

இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க.ஸ்ரீமோகன், உதவி மாவட்டச் செயலாளர் உ. தர்சினி, யாழ்ப்பாணப் பிராந்திய வைத்திய அதிகாரி உ.கேதீஸ்வரன், நாகபூசணி அம்மன் ஆலய அறங்காவலர் சபைத் தலைவர் பரமலிங்கம் மற்றும் வேலணை பிரதேச செயலாளர், சுகாதாரத் துறைசார் பங்குதாரர்கள், இலங்கை போக்குவரத்து சபை உத்தியோகத்தர்கள், கடற்படை அதிகாரிகள், பொலிஸ் தரப்பினர், பிரதேசசபை பங்குதாரர்கள், துறை சார் திணைக்கள தலைவர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

You Might Also Like

நயினாதீவு நாகபூஷணியின் கொடியேற்றம் நாளை!

வேலணை பிரதேச பண்பாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.

வேலணையில் மாணவர்களுக்கு கல்விசார் உபகரணம் வழங்கும் நிகழ்வு!

நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!

நயினாதீவில் சாரணர் சின்னம் சூட்டும் நிகழ்வு !

வேலணை பிரதேச சபைத் தவிசாளராக சிவலிங்கம் அசோக்குமார் தெரிவு!

ஊர்காவற்றுறை பிரதேச சபைத் தவிசாளராக அன்னலிங்கம் அன்னராசா தெரிவு!

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவத்தையொட்டி அரை மணிநேரத்துக்கு ஒரு சேவை!

SUB EDITOR May 23, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article 1500 மில்லியன் பெறுமதியான சீனா உதவிகளை பகிர்ந்தளிப்பது தொடர்பில்அமைச்சர் டக்ளஸ் ஆலோசனை!
Next Article வங்காள விரிகுடா கடற் பிராந்தியத்தில் உருவாகியுள்ள தாழமுக்கம் – எச்சரிக்கை!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !
வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!
நயினாதீவு நாகபூஷணியின் கொடியேற்றம் நாளை!

You Might Also Like

தீவகச் செய்தி

நயினாதீவு நாகபூஷணியின் கொடியேற்றம் நாளை!

June 25, 2025
தீவகச் செய்தி

வேலணை பிரதேச பண்பாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.

June 24, 2025
தீவகச் செய்தி

வேலணையில் மாணவர்களுக்கு கல்விசார் உபகரணம் வழங்கும் நிகழ்வு!

June 24, 2025
தீவகச் செய்தி

நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!

June 23, 2025
தீவகச் செய்தி

நயினாதீவில் சாரணர் சின்னம் சூட்டும் நிகழ்வு !

June 20, 2025
தீவகச் செய்தி

வேலணை பிரதேச சபைத் தவிசாளராக சிவலிங்கம் அசோக்குமார் தெரிவு!

June 20, 2025
தீவகச் செய்தி

ஊர்காவற்றுறை பிரதேச சபைத் தவிசாளராக அன்னலிங்கம் அன்னராசா தெரிவு!

June 20, 2025
தீவகச் செய்தி

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவத்தையொட்டி அரை மணிநேரத்துக்கு ஒரு சேவை!

June 20, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?