நயினாதீவு குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண விசேட பிரேரணை!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நயினாதீவில் காணப்படும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண விசேட பிரேரணை ஒன்றை வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் ஆலோசனைக் குழுவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் சமர்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

நயினாதீவு கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் தற்போது முழுமையாக செயலிழந்துள்ளது. சுத்திகரிக்கப்பட்ட நீரில் அனுமதிக்கப்பட்ட அளவை விட (TDS) மிக அதிகளவு உப்புத்தன்மை (4000 mg/L வரை) காணப்படுகிறது.

அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு காரணமாக தொழில்நுட்பக் கோளாறுகள் (நாளில் 5-6 முறை), உப்புக் கசிவு மற்றும் இயந்திரப் பாகங்கள் பழுதடைந்தமையால் குடிநீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

பா. உ இன் வேண்டுகோளின் அடிப்படையில் வேலணை பிரதேச செயலகத்தில் வேலணை பிரதேச செயலாளர், பிரதேச சபைத் தலைவர், நீர் வழங்கல் அமைச்சின் அலுவலர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோருடன் நடைபெற்ற (05.03) கூட்டத்தின் படி, சில முக்கியமான தீர்மானத்தை எடுக்க கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது

அதன்படி  நிரந்தரத் தீர்வு (குழாய் வழி விநியோகம்): நயினாதீவு மக்களின் நீண்டகால குடிநீர் பிரச்சினைக்கு தீர்வாக, யாழ்-கிளிநொச்சி குடிநீர் திட்டத்தின் கீழ் (வடமராட்சி கிழக்கு கடல்நீர் சுத்திகரிப்பு திட்டம்) குறிகட்டுவானிலிருந்து நயினாதீவிற்கு கடல் அடியினூடாக குழாய்களைப் பொருத்தி நிரந்தர குடிநீர் விநியோகத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

அவசர கால நடவடிக்கையாக தற்போதைய தட்டுப்பாட்டை நீக்க, புங்குடுதீவு நீர்நிலைத் தேக்கத்திலிருந்து குறிகட்டுவான் ஊடாக நயினாதீவிற்கு உடனடியாக நீர் விநியோகத்தை சீர்செய்ய வேண்டும்.

புதிய இயந்திரப் பாகங்களை கொள்வனவு செய்து, RO நிலையத்தை தற்காலிகமாக இயங்கச் செய்வதோடு, மின்சாரத் தடையால் இயந்திரங்கள் பாதிக்கப்படாமல் இருக்க தகுந்த மின்சாரப் பாதுகாப்பு முறைகளை ஏற்படுத்த வேண்டும்.

Share this Article
Leave a comment