நயினாதீவில் உள்ள அதிகூடிய வயதான மூத்த பிரஜைகள் யாழ் மாவட்டரீதியில் கௌரவிப்பு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

யாழ் மாவட்டத்தில் அதிகூடிய வயதான மூத்த பிரஜைகளின் தரப்படுத்தலில் நயினாதீவுக்கு  இரண்டாம் மூன்றாம் இடங்கள் கிடைக்கப்பெற்றது

மூத்த பிரஜைகள் இருவரும் நேற்றையதினம் (நவம்பர்04) வேலணை பிரதேசசெயலகத்தால் கொளரவிக்கப்பட்டனர்.

யாழ் மாவட்டத்தின் அதிகூடிய வயதான மூத்த பிரஜைகளின் வரிசையில் 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொள்ளும்  மூத்த பிரஜையாக நயினாதீவைச் சேர்ந்த 104 வயதினை அடைந்த சின்னத்துரை தங்கம்மா தெரிவாகியதுடன் 3ஆவது இடத்தினை  நயினாதீவைச்சேர்ந்த  103 வயதினையடைந்த ஐயாத்துரை சிவக்கொழுந்து தெரிவாகியுள்ளார்

இவர்களுக்கான  கௌரவிப்பு நிகழ்வானது நயினாதீவு தெற்கு  (J/36) கிராம உத்தியோகத்தர் பிரிவில் வேலணை உதவிப்பிரதேச செயலாளர் க.பார்த்தீபன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

Share this Article