நண்பர்கள் வட்டத்தின் 2020ம் ஆண்டுக்கான பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தேர்வும் நளை மறு தினம் சனிக்கிழமை (டிசம்பர் 12) மாலை 05.30 மணிக்கு நண்பர்கள் வட்டத்தின் தலமைக்காரியாலயத்தில் தலைவர் பா.அன்ரன் கிறிஸ்ரியன் அவர்களது தலமையில் இடம் பெறவுள்ளது.
நண்பர்கள் வட்டத்தின் எழுதப்பட்ட யாப்பிற்கு அமைவாக டிசம்பர் 01ம் திகதி தொடக்கம் டிசம்பர் 31ம் திகதிக்கு இடையில் புதிய நிர்வாகம் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதற்கு அமைவாக பொதுக்கூட்டத்தினை தொடர்ந்து 2021ம் ஆண்டுக்கான புதிய நிர்வாக சபை தேர்வும் இடம் இடம்பெறவுள்ளது.
2020ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் மற்றும் வரவு செலவு விபரங்கள் யாவும் கலந்துரையாடப்படவுள்ளதுடன் இவ்வாண்டு செயற்பாடுகளை மதிப்பீடு செய்து அடுத்த ஆண்டுக்கான செயற்றிட்டங்களை திட்டமிடுவதற்கும் நிர்வாகம் தீர்மானித்துள்ளது,