தையிட்டியில் பொலிஸாரால் தள்ளி விழுத்தப்பட்ட சிறீதரன் எம்.பி – வேலன் சுவாமிகள் உட்பட ஐவர் கைது!!!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

யாழ். தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு அருகில் கடும் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.

இதன்போது, வேலன் சுவாமிகள், பிரதேச சபை தவிசாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட ஐவர்  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக அங்கிருக்கும் மக்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றினை தற்போது முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், போராட்டக்களத்தில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் கடும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்போது, அங்கிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பொலிஸாரால் கீழே தள்ளி விழுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது

Share this Article