தையிட்டி விகாரை விவகாரம் – தீர்வின்றி முடிவு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ். மாவட்ட மற்றும் தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழுகூட்டங்களின் தீர்மானங்களை புறம்தள்ளி தையிட்டியில் நிர்மாணிக்கப்பட்டவிகாரை அகற்றப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்பொன்னம்பலம் தெரிவித்தார்.

அதன் போது, தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதியில் உள்ள தனியாருக்கு, அருகில் உள்ள விகாரை காணிகளை வழங்குவதற்கு, அல்லது அவர்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க முடியும் என வடமாகாண ஆளுநர்தெரிவித்தார்.

இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்சட்டவிரோதமான முறையில் மதில் காட்டினாலே அகற்ற சட்டம் இருக்கையில், சட்டவிரோதமான முறையில், ஒருங்கிணைப்பு குழு தீர்மானங்களையும் மீறிஅடாத்தாக கட்டப்பட்ட விகாரை அகற்றப்பட வேண்டும். அது எந்த விதத்திலும்இன நல்லிணக்கத்திற்கோ, மாற்றத்திற்கோ ஏற்றதல்ல என தெரிவித்தார்.

Share this Article