தேசிய மட்ட ஆங்கில தின போட்டியில் வெற்றி பெற்ற கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவர்கள் கெளரவிப்பு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

2025ம் ஆண்டு  தேசிய ஆங்கில தினப்போட்டியில் கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவர்களான K.சுவேதனா,T.அமுதவன் ஆகியோர் Creative write போட்டியில் பங்குபற்றி  மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் முதன்முதலாக வெற்றியை தமதாக்கிக் கொண்டனர்.

இவ்விரு மாணவர்களையும் கெளரவிக்கும் வகையில் கெளரவிப்பு நிகழ்வானது கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கட்டளை நிறுவனத்தின் ஏற்பாட்டில்  கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (26/12) பிற்பகல் நடைபெற்றது.

கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் நிறுவனத்தின் தலைவர் அ.பங்கையச்செல்வன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துகொண்டார்.

அரசாங்க அதிபருடன்  மாவட்ட மேலதிக அரசாங்கதிபர் நளாயினி இன்பராஜ்,மேலதிக அரசாங்க அதிபர் (காணி) அஜிதா பிரதீபன், கிளிநொச்சி தெற்குவலயக்கல்விப்பணிப்பாளர், கிளிநொச்சி மகா வித்தியாலய முதல்வர், பிரதி முதல்வர், ஆசிரியர்கள், கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Share this Article
Leave a comment