நாட்டில் பொது பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று ஜனாதிபதிஅனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
இன்று (பெப். 23) ஞாயிற்றுக்கிழமை கண்டியில் உள்ள ஸ்ரீ தலதா மாளிகைக்குவிஜயம் செய்த போது கருத்துத் தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில் ,
சமீபத்திய துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் குற்றவியல் குழுக்களுக்குஇடையிலான மோதல்களின் விளைவாகும் என்றும், அவற்றை நிவர்த்தி செய்யஉடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்ததுடன் அமைதியின்மையை உருவாக்க முயற்சித்ததாகக் கூறப்படும் தகவல் குறித்துஅதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.