தேசிய பாடசாலைகளின் மின்சாரக் கட்டணத்தைச் செலுத்துவதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிலையான கொடுப்பனவு 12,500 ரூபாவிலிருந்து 25,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது
பாடசாலையின் அளவு அல்லது மாணவர் எண்ணிக்கையைப் பொருட்படுத்தாமல் அனைத்து தேசிய பாடசாலைகளுக்கும் சமமாக 25,000 ரூபா வழங்கப்படவுள்ளது.
ஒரு மாதத்தின் மின்சாரக் கட்டணம் இந்தத் தொகையைத் தாண்டும் பட்சத்தில், எஞ்சிய தொகையை அந்தந்த பாடசாலைகளே சுயமாக முகாமைத்துவம் செய்ய வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.