தெல்லிப்பழையில் கொடூர விபத்து – இளைஞர் பலி!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

தெல்லிப்பழை சந்திக்கு அருகில் நேற்றைய தினம் திங்கட்கிழமை (நவம்பர் 03) இரவு இடம்பெற்ற விபத்தில் , மயிலிட்டியை சேர்ந்த வசந்த் (வயது 35) எனும் இளைஞன் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் , மற்றுமொரு மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகிய நிலையில் , வீதியில் விழுந்த வேளை வீதியில் வந்த கனரக வாகனம் இளைஞனுடன் மோதியதில் இளைஞன் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக தெல்லிப்பழை வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் , பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share this Article