கிளிநொச்சி – திருவையாறு வீதியில் இன்று (10/12) நண்பகல் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் திருவையாறு பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய செல்வரத்தினம் சோபனாத் ஆவார்.
கிளிநொச்சி நகரிலிருந்து இரணைமடு நோக்கி தனது மனைவியுடன் உந்துருளியில் பயணித்தவர் வில்சன் வீதி மொட்டை பாலத்திற்கு அருகில் வீதியின் ஓரமாக
உந்துருளியை நிறுத்த முற்பட்ட போது அவரை தொடர்ந்து மணலுடன் வந்த ரிப்பர், உந்துருளியை நோக்கி வேகமாக நெருங்கி வருவதனை அவதானித்த மனைவி உந்துருளியிலிருந்து வேகமாக பாய்ந்து வீதியின் மறுபுறம் ஓடிய சமயத்தில் ரிப்பர் குறித்த நபரின் மீது மோதியத்தில் அவர் ரிப்பரின் பின்பக்க சில்லுக்குள் சிக்குண்டதோடு மணலும் அவரின் மீது கொட்டியத்தில் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார் என என உறவினர்கள் தெரிவித்துள்ளதோடு சிசிரிவி காட்சிகளும் அவ்வாறே பதிவாகியுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவரின் சடலம் மேலதிக பிரேத பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.