முள்ளிவாய்க்காலில் 102 பேருடன் கரை ஒதுங்கிய மியன்மார் படகு இன்று(டிசம்பர் 20) காலை திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
முன்னதாக முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் இப்படகு 102 பேருடன்நேற்று (டிசம்பர்19) கரை ஒதுங்கியது. குறித்த இப்படகு திசைமாறி வந்துகரையொதுங்கியதாகவும், இப்படகில் 35 சிறுவர்களும், ஒரு கற்பிணி தாயும்உள்ளனர் எனவும் அறிய முடிகின்றது.
மொழி பிரச்சினை காரணமாக குறித்த நபர்களிடமிருந்து சரியான தகவல்களைதற்போது பெற்றுக் கொள்ள முடியவில்லை என்பதுடன் இவர்கள் இலங்கைக்குகுடியேறத்தான் வந்தார்களா? என்ற சந்தேகமும் நிலவுவதாக தெரியவருகின்றது.
இப்படகினை முள்ளிவாய்க்கால் கடற்கரையில் கரைசேர்ப்பதில் சிரமங்கள்இருந்தமையினால் இப்படகு திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிய வருகின்றது. இதற்கான ஏற்பாடுகள் திருகோணமலை மாவட்ட அரசாங்கஅதிபரின் தலைமையில் இடம்பெற்றிருந்தது. பாடசாலை ஒன்றில் தங்க வைக்கப்பட்டுளலளதுடன் சுகாதரத்துறையினர் உட்பட அதனுடன் தொடர்புடைய திணைக்களங்கள்இவ்விடயம் தொடர்பில் உதவிவருகின்றன.