தழிழர் தரப்பிற்கு ஏற்பட்டுள்ள சவால் – சட்டத்தரணி வி.மணிவண்ணன்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

புதிய அரசாங்கத்தினில் திணிக்கப்படவுள்ள தீர்வுகளை ஏற்றுக்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட போகும் என்பதனை உணர்ந்து தமிழர் தரப்புக்கள்ஒன்றிணைய வேண்டும் என்று சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நேற்றுமுன்தினம் (நவம்பர் 17) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

இடதுசாரிகளுக்கு என பண்பியல்வு இருக்கிறது. அவர்கள் தமக்கு ஏற்ற வகையில் சட்டங்களை மாற்றி தமது ஆட்சியை தக்கவைத்துக் கொண்டிருப்பார்கள்.இதை உணர்ந்து கொண்டு தமிழர்தரப்புஒற்றுமைப்பட வேண்டும்.

வடக்கையும் கிழக்கையும் பறிகொடுத்து விட்டு, எம் மீது திணிக்கப்பட போகும்தீர்வுகளை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட போகும் என்பதனைஉணர்ந்து கொண்டும், உள்ளூராட்சி தேர்தல் மற்றும் மாகாண சபைதேர்தல்களிலும் அவற்றினை தமிழர் தரப்பு பறிக்கொடுக்க வேண்டிய நிலைமைஏற்படும்.

இதனை உணர்ந்து தமிழர் தரப்புக்கள் ஒற்றுமைப்பட வேண்டும். இதனை நாம்அழைப்பாக கூட விடுகின்றோம்.தேர்தலில் தோற்றுபோனவன் என்று இதனைபலர் கூறி நகையாடலாம். அவ்வாறில்லாமல் தமிழ் தலைமைகள் ஒன்றுபடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஆசன மோதல்களை கைவிட்டு தமிழ் தரப்பு ஒன்றிணைய வேண்டும். தேசியமக்கள் சக்தி வாக்களித்து விட்டார்கள் என தமிழ் வாக்களர்களை மலினப்படுத்தவிரும்பவில்லை.பொதுக்கட்டமைப்பின் உடைவுக்கு, பொது அமைப்புக்கள் தான்பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் தான் உடைத்தார்கள்” என்றுகுறிப்பிடப்பட்டுள்ளார்.

Share this Article