தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் வடக்கு கிழக்கு ஆயர் மன்றம்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

தமிழ் மக்களின் அரசியல் தீர்வை  முன்னிறுத்தி, சிதறிக்கிடக்கும் தமிழ் அரசியல் கட்சிகளை ஒரே நேர்க்கோட்டில் ஒன்றிணைக்கும் புதிய முயற்சியை வடக்கு கிழக்கு ஆயர் மன்றம் முயற்சித்துள்ளது

இதன் ஒரு நடவடிக்கையாக யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மறைமாவட்டங்களின் ஆயர்களும், குருமுதல்வர்களும் பங்கேற்ற வடகிழக்கு ஆயர் மன்றத்தின் விசேட அமர்வு கடந்த புதன்கிழமை (18/03) வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றுள்ளது

​தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் குறித்த இக்கட்டான சூழலில், மதத் தலைவர்களின் இந்த ஒன்றிணைப்பு முயற்சி அரசியல் தளத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

Share this Article