நாடாளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பை செலுத்துவதற்கு மேலும் மேலதிகமாக இரண்டு நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி 24ம் திகதி காலை எட்டு முப்பது மணி முதல் மாலை 4 மணி வரையும் 25ம் திகதி காலை எட்டு முப்பது மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த தபால் மூல வாக்குகளை செலுத்த முடியும் என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.