தனிநபர் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய மாதத்திற்கு 16ஆயிரம் தேவை !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

ஒரு தனிநபர் தனது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்ளஅவருக்கு ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 16,318 ரூபாய் தேவைப்படுகிறது எனபுள்ளிவிபரவியல் மற்றும் தொகை மதிப்பு திணைக்களம் அறிக்கைவெளியிட்டுள்ளது.

பெப்ரவரி மாதம் மாவட்ட மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வாழ்க்கை செலவுதரப்படுத்தலுக்கமைய கொழும்பு மாவட்டத்தில் வாழும் ஒருவரது ஒருமாதஅடிப்படை தேவைகளுக்கான செலவு 17,599 ரூபாவாக காணப்படுவதுடன், மொனராகலை மாவட்டத்தில் வாழ்பவரின் ஒருமாத செலவு 15,603 ரூபா எனதிணைக்களம் வாழ்க்கை செலவு சுட்டியை தரப்படுத்தியுள்ளது.

வறுமைக் கோடு என்பது ஒரு நபருக்கு அடிப்படை உணவு மற்றும் உணவு அல்லாததேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான குறைந்தபட்ச செலவினத்தைக்குறிக்கிறது, மேலும் இது பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவு மாற்றங்களைப்பிரதிபலிக்கும் வகையில் மாதந்தோறும் திருத்தப்படுகிறது

Share this Article