டிஜிட்டல் மயமாகும் ஊழியர் சேமலாப நிதியத் தரவுகள்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

மத்திய வங்கியும் தொழில் திணைக்களமும் இணைந்து ஊழியர் சேமலாப நிதிஉள்ளிட்ட தரவுகளைப் பெறக்கூடிய டிஜிட்டல் தரவு அமைப்பைத் தயாரிக்குமாறுஅரசாங்கக் கணக்குக் குழு அறிவுறுத்தியுள்ளது.

தொழில் திணைக்களத்தின் 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளுக்கானகணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயற்பாடுகளைஆராய்வதற்காக அரசாங்கக் கணக்குக் குழு, நாடாளுமன்றத்தில் இராஜாங்கஅமைச்சர் லசந்த அழகியவண்ண தலைமையில் கூடிய போதே இது குறித்துவிவாதிக்கப்பட்டுள்ளது.

தொழில் திணைக்களத்தில் முதலாளிகளைப் பதிவு செய்த பின்னர், குறித்தஊழியர் சேமலாப நிதி, மத்திய வங்கிக்கு வழங்கப்படுவதாகவும், மத்திய வங்கிஒவ்வொரு 6 மாதங்களுக்கும் தொழில் திணைக்களத்திற்கு கொடுப்பனவுகள்பற்றிய தரவுகளை வழங்குவதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்

எனினும் ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் தரவுகளைப் பெறுவதற்குப் பதிலாக, தொடர்ந்து புதுப்பிக்கக்கூடிய ஒரு அமைப்பை தொழில் திணைக்களம் கொண்டிருக்க வேண்டும் என்று குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இவை மக்களின் பாதுகாப்பிற்கு இன்றியமையாதது எனவும் அந்த குழுவலியுறுத்தியுள்ளது. 

Share this Article