ஞானசார தேரரின் விடுதலைக்கான ஆர்ப்பாட்ட சந்தேகநபர்களைக் கைது செய்ய உத்தரவு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, உரிய அனுமதியின்றி ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை உடனடியாகக் கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இன்று புதன்கிழமை (04/11) மேலதிக நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share this Article
Leave a comment