ஜனாதிபதி நேற்றிரவு அமெரிக்காவிற்கு விஜயம்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

மக்களின் பொதுப்பாதையில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து, ஜனாதிபதி அநுர நேற்றிரவு (செப். 22) அமெரிக்காவிற்கு விஜயம் ஒன்றிற்காகபுறப்பட்டார்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச்சபை அமர்வில் கலந்து கொள்ள உள்ளார். புதன்கிழமை (செப்.24) உள்ளூர்நேரப்படி பிற்பகல் 3.15 மணிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில்அவர் உரையாற்ற உள்ளார்.

மேலும், இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஐக்கியநாடுகள் சபையின் செயலாளர் நாயகம் மற்றும் பல உலகத் தலைவர்களுடன்இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்த உள்ளார்.

அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களுடனான சந்திப்பிலும் ஜனாதிபதிபங்கேற்பார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் இந்த விஜயத்தின் போதுவெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறைஅமைச்சர் விஜித ஹேரத் இணைந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Article