ஜனாதிபதி தேர்தல் : தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பு !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

ஜூலை மாத இறுதிக்குள் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் எனதேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சற்றுமுன்னர் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டதேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க இதனைதெரிவித்தார்.

இந்த திகதியை நடைமுறைப்படுத்துவதில் வேறு எந்த காரணமும் பாதிப்பைஏற்படுத்தாது என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.

அரசியலமைப்பு மற்றும் ஜனாதிபதியின் சட்டத்தின் படி, இந்த தினங்களைஎவரும் பரிசீலிக்க முடியும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது தேர்தலுக்கானதிகதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 16 முதல் 21 நாட்களுக்குள்மேற்கொள்ளப்படும்

வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளிலிருந்து 4-6 வாரங்களுக்குள்ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Share this Article