ஜனாதிபதி தேர்தலுக்கான நிதியை வழங்க திறைசேரி தயாராகவுள்ளது!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

தேர்தல் ஆணையாளரின் கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி தேர்தலுக்கானநிதியை வழங்க திறைசேரி தயாராகவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர்ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ள அவர் அதில் மேலும்குறிப்பிட்டுள்ளதாவது,

இவ்வாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தேர்தல் நடவடிக்கைகளுக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. பணப் புழக்கங்களுக்கிடையில் முரண்பாடுஏற்படாத வகையில் நிதியை வெளியிடுவதற்கு பொருளாதாரம் உரிய முறையில்ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய தேர்தல் ஆணையாளர் அலுவலகம் சுமார் 8 பில்லியன் ரூபாமதிப்பீட்டை அனுப்பியுள்ளது. அச்சிடுதல், பாதுகாப்பு, எரிபொருள் வாக்குப்பெட்டிகள் போன்ற எந்தவொரு அவசரத் தேவைக்கும் நிதியை வழங்க திறைசேரிதயாராக உள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கைஅதிகரித்து, மதிப்பிடப்பட்ட செலவு அதிகரித்தால், அவ்வாறானநடவடிக்கைகளுக்கான மேலதிக செலவுகளை சமாளிப்பதற்கு தற்போது நிதிஇருப்பதால் பிரச்சினை இல்லை என்றார்

Share this Article