சைவ ஆலயங்களில் பிரசங்க மரபு முற்றாக இல்லாமல் போய்விடவில்லையென குறிப்பிட்டுள்ள அகில இலங்கை சைவப்புலவர் சங்கம் இன்றும் பல இடங்களில் அந்த மரபு நடைமுறையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சைவப்புலவர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது:
எந்தவொரு ஆலயத்திலும் தற்போது பிரசங்க மரபு இல்லாமல் போய்விட்டதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்த கருத்தில் எமக்கு உடன்பாடில்லை. கடந்த பல வருடங்களாக சைவப்புலவர்கள் மற்றும் இளம் சைவப்புலவர்கள் ஆலயங்கள் தோறும் விழாக்கள், உற்சவங்களில் தொடர் சொற்பொழிவுகளை ஆற்றிவருகின்றனர்.
அத்துடன் சிறுவர்கள் மத்தியில் சைவ சமய சிந்தனைகள் வேரூன்றச் செய்யும் வகையில் போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்கி ஊக்குவித்து தெய்வீகப் பணிகளை ஆற்றி வருகின்றனர்.
பல ஆலயங்கள் தாமாக முன்வந்து சொற்பொழிவுகளை செய்து வருகின்றன. எனவே பிரசங்க மரபு முற்றாக இல்லாமல் போய்விட் டது எனக் கூறுவது பொருத்தமற்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.