செவ்வந்தி வழங்கிய தகவலில் பிரதான ஆல்கடத்தல்காரர் கைது!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவர்களை நாடு கடத்துவதற்கு உதவி செய்தபிரதான ஆல்கடத்தல்காரர் ஒருவர் கிளிநொச்சி பிரதேசத்தில் வைத்துகைதுசெய்யப்பட்டுள்ளதாக கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவுதெரிவித்துள்ளது.

பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி வழங்கியவாக்குமூலத்தின் அடிப்படையில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளுக்காக இஷாரா செவ்வந்தி தலைமறைவாக இருந்தகிளிநொச்சி பிரதேசத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட போதே சந்தேக நபர்கைதுசெய்யப்பட்டுள்ளார்.

“கணேமுல்ல சஞ்சீவ” படுகொலைசெய்யப்பட்டதை அடுத்து இஷாராசெவ்வந்தி சுமார் மூன்று நாட்களாக கிளிநொச்சியில் தலைமறைவாகஇருந்துள்ள நிலையில் குறித்த ஆல்கடத்தல்காரரின் உதவியுடன்இந்தியாவிற்கு தப்பிச் சென்று பின்னர் அங்கிருந்து நேபாளத்திற்குசென்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த ஆல்கடத்தல்காரர் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த பலரைஇந்தியாவுக்கு நாடு கடத்தியுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் மேலும்தெரியவந்துள்ளது.

Share this Article