செம்மணி மனித புதைகுழியிலிருந்து இதுவரை 63 மனித எலும்புக்கூடுகள்அடையாளம் காணப்பட்டு அதில் 54 மனித எலும்புக்கூடுகள் முழுமையாகஅகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வழக்கின் ஊடான இரண்டாம் கட்டஅகழ்வுப்பணியின் 14 ஆவது நாளான அகழ்வு நேற்று யாழ்ப்பாணம் நீதிவான்ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்றது.
இதுவரை 63 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்படுள்ள நிலையில், அவற்றில் 54 மனித எலும்பு கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த அகழ்வின் போது நேற்று (ஜூலை 09) ஒரு சிறுமியின், ஆடைகள் , இறப்பர் செருப்பு மற்றும் பிற பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் கட்ட அகழ்வு இன்றுடன் தற்காலிகமாக நிறைவடைய உள்ளநிலையில், விரைவில் அகழ்வுப் பணிகள் மீண்டும் தொடங்கும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.