இலங்கை நாட்டின் வடகிழக்கு, தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தொடர்ந்து உருவாகி மேற்கு , வடமேற்கு நோக்கி நகரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று (ஒக்.25) னதென்கிழக்கு மற்றும் அருகிலுள்ள மத்திய வங்காள விரிகுடாவில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது நாளைக்குள் ஆழமான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாகவும், நாளை மறுநாள்(ஒக்.27) சூறாவளியாகவும் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.