சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

20 ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ் கூரை சூரியமின்சக்தி அமைப்புகளுக்கான புதியநிலையான கட்டணங்களை மின்சார சபை அறிவித்துள்ளது.

இதன்படி 0-5 kWஇற்கு இடையிலான அமைப்புகள் ஒரு அலகுக்கு 20.90 ரூபாஎன்ற அதிகபட்ச கட்டணமாக பெறவுள்ளன.

இதைத் தொடர்ந்து 5–20 kW அமைப்புகள், அலகு ஒன்றுக்கு 19.61 ரூபாய்கட்டணம் கிடைக்கும்.

இந்த நிலையில், அமைப்பின் அளவு அதிகரிக்கும் போது, கட்டணம் குறைகிறது. எடுத்துக்காட்டாக, 20–100 kW அமைப்புகள், அலகு ஒன்றுக்கு 17.46 ரூபாயைபெறும், அதேநேரம், 100–500 kW அமைப்புகள் 15.49 ரூபாயை பெறும்.

500–1,000 kW மற்றும் அதற்கு மேற்பட்ட 1,000 kW இலிருந்து பெரியஅமைப்புகள் முறையே 15.07 ரூபாய் மற்றும் 14.46 ரூபாய்களை பெறும் என்றுஅறிவிக்கப்படுள்ளது.

இந்த புதிய கொள்கை, அதிகமான வீட்டு உரிமையாளர்கள் மற்றும் சிறுவணிகங்கள் சூரிய மின்கலங்களை நிறுவவும், நாட்டின் எரிசக்திஇலக்குகளுக்கு பங்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில்வடிவமைக்கப்பட்டுள்ளது.

Share this Article