சுனாமி மற்றும் டித்வா புயலில் உயிரிழந்தவர்களுக்கு நினைவேந்தல்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

சுனாமி மற்றும் டித்வா புயல் அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில், நாளை வெள்ளிக்கிழமை (26/12) காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

2025ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சுனாமி பேரழிவிலும் அண்மையில் நாட்டில் இடம்பெற்ற டித்வா புயல் தாக்கத்தின் பேரனர்த்தங்களிலும் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நினைவேந்தல் நிகழ்வானது காலியில் உள்ள பெரலிய சுனாமி நினைவுத்தூபிக்கு முன்பாக நாளை காலை 8.30 மணி முதல் முற்பகல் 11 மணி வரை நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட செயலகத்தினை மையமாகக் கொண்டு சர்வமத பிரார்த்தனை நிகழ்வுகளை நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எனவே, இரு நிமிட நிசப்தத்தை கடைபிடித்து, உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துமாறும் இயற்கைப் பேரழிவுகளால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூருமாறும் நாட்டு மக்கள் அனைவரும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Share this Article