சிறுப்பிட்டியில் குளவியின் கொட்டுக்கு இலக்கான இளைஞர் உயிரிழப்பு.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

சிறுப்பிட்டி மேற்கு பகுதியில் கடந்த திங்கட்கிழமை (நவம்பர் 4) குளவியின் கொட்டுக்கு இலக்கான இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சிறுப்பிட்டி மேற்கு பகுதியை சேர்ந்த நவரத்தினம் கேதீஸ்வரன் (வயது – 35) என்பவரே உயிரிழந்தவர் ஆவார்.

இவர் தனது வாகனத்தில் உறங்கிக் கொண்டிருந்தபோது குளவிகள் கொட்டியுள்ளன. வலியை தாங்க முடியாமல் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சடலம் உடற்கூறு பரிசோதனை முடிவிற்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 

Share this Article