“வாழ்விற்கான பேரொளி வாசிப்பு” எனும் தொனிப்பொருளிலான அமர்வு 20 (25/03/2026) புதன்கிழமை காலை நெடுந்தீவு கிழக்கு சன சனசமூக நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது

வாழ்விற்கான பேரொளி “வாசிப்பு” எனும் தொனிப்பொருளில் நெடுந்தீவு கிழக்கு சனசமுக நிலையத்தின் இரகுபதி நூலகத்தில் அங்கத்தவராகியுள்ள மற்றும் அங்கத்தவராக ஆர்வமுள்ள ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான நூலக அறிமுகம் , கதை கூறல் மற்றும் வாசிப்பு ஆர்வத்தினை ஊக்குவித்தல் என்பன நிகழ்வின் அமர்வு – 20 இல் இடம்பெற்றதுடன் வளவாளராக ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் செ.மகேஷ் அவர்கள் கலந்து சிறப்பித்தார்
இதேவேளை சிறுவர்களிடம் நூல்களை வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கில் வாழ்விற்கான பேரொளி”வாசிப்பு” எனும் நிகழ்விற்கான வழிகாட்டல் மற்றும் அனுசரணையினை “வள்ளித்தமிழ் அமுதம் செயற்பாட்டுக் குழு”வினர் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.