சிரேஷ்ட பத்திரிகையாளருக்கான மருத்துவ நிதியுதவி வழங்கல்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

யாழ் ஊடக அமையத்தின் ஆரம்பகால உறுப்பினரும் சிரேஷ்ட பத்திரிகையாளருமான பாலசிங்கம் பார்த்தீபனின் மருத்துவ செலவுக்காக நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டது.

யாழ் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் சுவிஸ் ஊடக அமையம் மற்றும் யாழ் ஊடக அமையம் ஆகியன இணைந்து ஒரு தொகை நிதியை வழங்கி வைத்தனர்.

கிளிநொச்சி முரசுமோட்டையில் உள்ள ஊடகவியலாளரின் இல்லத்துக்கு சென்ற யாழ் ஊடக அமைய பிரதிநிதிகள் குறித்த நிதியுதவியை நேரடியாக வழங்கி வைத்தனர்.

இவர் ஈழநாதம் பத்திரிகையில் 1992ம் ஆண்டு முதல் ஊடகவியலாளராகவும், இறுதி யுத்த காலப்பகுதிகளில் உதவி ஆசிரியராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Article
Leave a comment