சாதாரண தரப் பரீட்சைகளுக்கான செய்முறை பரீட்சை தினம் அறிவிப்பு !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

2024 (2025) க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளுக்கான செய்முறைப் பரீட்சைகள் இம் மாதம் நடைபெறும் என்று பரீட்சைகள் திணைக்களம்அறிவித்துள்ளது.

பரீட்சை ஆணையர் நாயகத்தின் கூற்றுப்படி,  பரீட்சைகள் மே 21 முதல் 31 வரைநாடு முழுவதும் 1,228 தேர்வு மையங்களில் 171,100 பரீட்சார்த்திகளுக்காகநடைபெறும்.

எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வுகள் இரண்டிலும் மாணவர்கள்தோற்றுவது கட்டாயம் என்று பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளதுடன் இரண்டு தேர்வுகளின் மதிப்பெண்களும் பாடங்களின் இறுதி முடிவுகளைத்தீர்மானிக்கப் பயன்படுத்தப்படும்.

பரீட்சைக்கான அனுமதி அட்டைகளை மே 19 முதல் திணைக்களத்தின்அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.doenets.lk இல் இருந்து தேர்வு சுட்டெண்எண்ணை உள்ளிட்டு பதிவிறக்கம் செய்யலாம்.

மேலதிக விசாரணைகளுக்கு, பரீட்சார்த்திகள் 011-2784537, 2786616, 2784208, 011-2786200, 2784201 அல்லது 1911 என்ற தொலைபேசிஎண்களில் திணைக்களத்தை தொடர்பு கொள்ளலாம்

Share this Article