சாதாரண தர பரீட்சை – இணையவழி விண்ணப்ப முடிவு ஒக். 9 !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும்மாணவர்களுக்கான இணையவழி விண்ணப்பக் காலம் ஒக்டோபர் 9 ஆம்திகதியுடன் நிறைவடைகிறது.

அன்று நள்ளிரவு 12.00 மணிக்குப் பிறகு இணையவழி விண்ணப்ப முறைமூடப்படும் என்று இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் அறிக்கை ஒன்றைவெளியிட்டு தெரிவித்துள்ளது.

அதேநேரம் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான இறுதி திகதி எந்தகாரணத்திற்காகவும் நீட்டிக்கப்படாது என்றும், இறுதி திகதிக்கு முன்னர்விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பது கட்டாயம் என்றும் அந்த அறிக்கையில்குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிருவரும் சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 18 ஆம்திகதி முதல் இணையவழி ஊடாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக ஏதேனும் வினவ வேண்டுமானால், பின்வரும் தொலைபேசிஇக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம்: 0112-784208/ 0112-784537/ 0112-785922.

அத்துடன் 0112-784422 என்ற தொலைநகல் எண் அல்லதுgceolexansl@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் வினவமுடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது

Share this Article