சரத் பொன்சேகாவை நேரில் சந்திக்க ஜனாதிபதி திட்டம்!!!!

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read

ஜனாதிபதி அநுரகுமாரவை சிலவேளை, அடுத்த வாரம் சந்தித்து தான் கலந்துரையாடலில் ஈடுபடலாம் என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அத்துடன், இது நட்பு ரீதியான கலந்துரையாடலாக இருக்கும் என்றும், பதவிகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் தமக்கிடையில் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை எனவும் சரத் பொன்சேகா மேலும் சுட்டிக்காட்டினார். 

இந்த வருட இறுதிக்குள் நாம் ஆரம்பிக்கப்போகும் புதிய அரசியல் கட்சியை நாம் மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

நாடாளுமன்ற மட்டத்தில் செயற்படக்கூடிய தரமான ஒரு குழுவினர் எம்முடன் இருக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு

அதற்காக தற்போது நல்ல தரம் மற்றும் தகுதியைக் கொண்டவர்களை ஒன்றிணைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். இந்தப் பணியில் நாம் பெருமளவு வெற்றியடைந்துள்ளோம்.

எத்தனைப் பேரை ஒன்றிணைக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளோமோ, அவர்களில் சுமார் நான்கில் மூன்று பங்கினரை நாம் ஏற்கனவே இணைத்துள்ளோம்.

இதற்கு முன்னர் நான் ஒரு அரசியல் கட்சியை உருவாக்கிய அனுபவம் கொண்டவன். ஒரு கட்சியை உருவாக்கும் போது, எதிர்கொள்ள வேண்டிய சிக்கல்கள் மற்றும் சவால்கள் குறித்து எனககு நன்றாகத் தெரியும்.

எனவே, தற்போது திட்டமிட்ட நடைமுறையொன்றைப் பின்பற்றி இந்தப் பணிகளை முன்னெடுத்து வருகின்றோம். இந்த முயற்சி வெற்றியடையும் என்று நாங்கள் நம்புகின்றோம். இந்த வருட இறுதிக்குள் எமது கட்சியை மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்துவோம்.

தற்போதைய அரசாங்கம் வெற்றிகரமாகச் செயற்பட்டால், எங்களால் அதற்கு ஆதரவளித்து வலுச் சேர்க்க முடியும். அதேவேளை, நாட்டில் ஒரு அரசியல் மாற்றீடு இருக்க வேண்டும் என்பதிலும் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.

சமகால அரசாங்கம் தோல்வியடைந்தால், மக்கள் தெரிவு செய்வதற்கு மற்றுமொரு மாற்றீடு இருக்க வேண்டும். அந்த மாற்றீடாக நாங்கள் இருப்போம். எங்களுடன் மட்டுமல்லாமல் இந்தக் கருத்துதை ஏற்றுக்கொள்ளும் மக்களும் எம்முடன் இருப்பார்கள். கடந்த சில நாட்களாக நாட்டில் உள்ள பல்வேறு வர்த்தகர்கள் மற்றும் நாட்டின் மீது அக்கறைக் கொண்ட பலரைச் சந்தித்துப் பேசியுள்ளேன். அவர்கள் அனைவரிடமும் இந்தக் கருத்து காணப்படுகின்றது.

அதேசமயம், நாட்டின் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க என்னைச் சந்தித்து நட்புறவுடன் சிறிது நேரம் பேசலாம் என்று கூறியுள்ளார். சிலவேளை, அடுத்த வாரத்திற்குள் அவரைச் சந்தித்து நட்புறவான கலந்துரையாடலில் ஈடுபடலாம்.

ஆனால், அரசாங்கத்தில் பதவிகளைப் பெற்றுக்கொள்வது போன்ற விடயங்கள் குறித்து எங்களுக்கிடையில் எந்தப் பேச்சுவார்த்தையும் இடம்பெறவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

Share this Article
Leave a comment