புதிய சட்டமூலத்தில் எவ்விடத்திலும் முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வூதியகொடுப்பனவை இரத்துச் செய்வதாக குறிப்பிடப்படவில்லை.
சட்டமூலம் நிறைவேற்றப்பட்டவுடன் முன்னாள் ஜனாதிபதிகள் உத்தியோகபூர்வஅரச இல்லங்களில் இருந்து வெளியேற வேண்டும். அரச நிதியைமுகாமைத்துவம் செய்வதற்காகவே சிறந்த நோக்கத்துடன் இந்த சட்டமூலம்கொண்டுவரப்பட்டுள்ளது என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்முன்னாள் தலைவர் பிரதீபா மஹாநாமஹேவா தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறுகுறிப்பிட்டார்.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சினால் முன்னாள் ஜனாதிபதிகளின்உரித்துக்களை இரத்துச் செய்வது தொடர்பான சட்டமூலம் வர்த்தமானியில்பிரசுரிக்கப்பட்டுள்ளது. இது சிறந்ததொரு வழிமுறை என்றே குறிப்பிட வேண்டும்.
1986ஆம் ஆண்டு 4ஆம் இலக்க ஜனாதிபதிகளின் உரித்து சட்டத்தை இரத்துச்செய்வதற்கான சட்டமூலம் வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதிகளின் உரித்துச் சட்டத்தின் 2 மற்றும் 3ஆம் உறுப்புரைகள்வெளியிடப்பட்டுள்ள சட்டமூலத்தில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்கள் மற்றும்முன்னாள் ஜனாதிபதியின் விதவையான மனைவிக்கு வழங்கப்பட்டஉத்தியோகபூர்வ இல்லங்கள் இந்த சட்டமூலத்தின் ஊடாகமீளப்பெறப்படவுள்ளன.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வஇல்லங்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் விதவையான மனைவியின்செயலாளர்களுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவு மற்றும் ஏனைய உத்தியோகபூர்வவாகன வசதிகள் நீக்கப்படும்.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி ஒருவர் உயிரிழந்ததன் பின்னரும் அவருக்குகிடைக்கப்பெற்ற ஓய்வூதிய கொடுப்பனவு அவரது மனைவிக்கு இதுவரைகாலமும் வழங்கப்பட்டிருக்குமாயின் அந்த உரித்தும் இந்த சட்டமூலத்தின் ஊடாகநீக்கப்படும்.
முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்தினை இரத்துச் செய்யும் வகையில்பிரசுரிக்கப்பட்ட சட்டமூலத்தை இலங்கைப் பிரஜைகள் எவரும் 14 நாட்களுக்குள்உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்த முடியும்.
வெளியிடப்பட்ட சட்டமூலம் அரசியலமைப்புடன் முரண்படும் என்று ஒருசிலர்குறிப்பிடுகின்றனர். 1978ஆம் ஆண்டு 36(2) பிரிவில் ஜனாதிபதியின் சம்பளம்மற்றும் கொடுப்பனவு ஆகியன பாராளுமன்றத்தில் தீர்மானிக்கப்பட வேண்டும்என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் ஓய்வூதிய கொடுப்பனவும்பாராளுமன்றத்தால் தீர்மானிக்கப்பட வேண்டும்.
புதிய சட்டமூலத்தில் எவ்விடத்திலும் முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வூதியகொடுப்பனவை இரத்துச் செய்வதாக குறிப்பிடப்படவில்லை.
1986ஆம் சட்டத்தின் பிரகாரம் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்கள், வாகனங்கள் உள்ளிட்ட சிறப்பு சலுகைகள் மாத்திரமே இரத்துச்செய்யப்படவுள்ளன. ஆகவே இந்த சட்டம் 1978ஆம் ஆண்டு 36(2)ஆம் இலக்கசட்டத்துடன் முரண்படாது.
முன்னாள் ஜனாதிபதிகளுக்காக ஒதுக்கப்படும் நிதி திறைச்சேரிக்கு பாரியசுமையாக இருப்பதால் அதனை முகாமைத்துவம் செய்யும் நோக்கத்தில் இந்தசட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.
1986ஆம் ஆண்டின் 04ஆம் இலக்க இரத்துச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால்முன்னாள் ஜனாதிபதிகள் உத்தியோகபூர்வ அரச இல்லங்களில் இருந்துஉடனடியாக வெளியேற வேண்டும். அத்துடன் அரச வாகனங்களை மீளகையளிக்க வேண்டும்