கோம்பயன் மணல் மயானத்தில் மின் தகன மேடையில் கஞ்சா அழிப்பு

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ்ப்பாணத்தில் கைப்பற்றப்பட்ட அதிகளவு கேரள கஞ்சா இன்று (நவம்பர் 04 ) நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டு அழிக்கப்பட்டது. மொத்தம் 950 கிலோகிராம் கேரள கஞ்சா இவ்வாறு நாசம் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணம் கோம்பயன் மணல் இந்து மயானத்தின் மின் தகன நிலையத்தில், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் மற்றும் மேலதிக நீதிவான் உசைன் ஆகியோரின் முன்னிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பல ஆண்டுகளாக நீதிமன்ற சான்றுப் பொருளாக பாதுகாக்கப்பட்டிருந்த குறித்த கஞ்சா தொகுதிதான் இவ்வாறு அழிக்கப்பட்டது.

பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்ட கஞ்சா, நீதிமன்ற பதிவாளர், நீதிமன்ற பணியாளர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உட்பட அதிகாரிகள் முன்னிலையில் எரிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் கோம்பயன் மணல் இந்து மயானத்தின்

Share this Article