கொழும்பில் இரு துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கொழும்பில் நேற்றிரவு (செப்.05) மற்றும் இன்று அதிகாலை (செப்.06) இரண்டுதனித்தனியான துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

நேற்று இரவு 11.45 மணியளவில், கிராண்ட்பாஸ் மஹாவத்த மணிக்கூட்டுக்கோபுரத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம்தெரியாத நபர்கள், துப்பாக்கியால் ஒருவரை சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். இந்தசம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை இன்று அதிகாலை 1.40 மணியளவில், மருதானை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பஞ்சிகாவத்த வீதியில் அமைந்துள்ள வங்கியொன்றுக்குமுன்பாக, இரண்டு ஆயுததாரிகள் ஒருவரை சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாகபொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த நபர், தற்போது கொழும்பு தேசியவைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் தீவிரசிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இரு சம்பவங்கள் தொடர்பிலும் குறித்த பகுதி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Article