கொலம்பியாவில் இருந்து இலங்கைக்கு கொக்கெயின் போதைப்பொருள் !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கொலம்பியாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பொதி ஒன்றிலிருந்து2.139 கிலோகிராம் கொக்கெயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக சுங்கதிணைக்களம் தெரிவித்துள்ளது.

75 மில்லியன் ரூபாய் பெறுமதியான இப்போதைப்பொருள், கட்டுநாயக்க விமானநிலைய களஞ்சிய முனையத்தில் வைத்து மீட்கப்பட்டதாக சுங்க அதிகாரிகள்தெரிவித்தனர்.

கொலம்பியாவின் பொகோடாவிலிருந்து கனேமுல்ல பகுதியிலுள்ள முகவரிக்குவிமானம் மூலம் அனுப்பப்பட்ட இந்த பொதியிலிருந்த மின் சாதனமொன்றில்சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இப்போதைப்பொருள்கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மாளிகாவத்தை பிரதேசத்தில் சந்தேகத்தின் பேரில் 23 மற்றும் 24 வயதுடையஇருவர் மற்றும் சரக்குகளை அகற்றும் முகவர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள்தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

Share this Article