நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 48 பேர் மரணித்துள்ளனர் என்று அறிக்கையிடப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில்
இந்தத் தகவல் வெளியிடப் பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 147 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் உயிரிழந்த 48 பேரில் 30 ஆண்களும், 18 பெண்களும் அடங்குகின்றனர் என்றும் அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.