கேபிள் கார் விபத்தில் பிக்குகள் உயிரிழப்பு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

குருணாகலை மெல்சிறிபுர – நா உயன ஆரண்ய சேனாசனத்தில் நேற்றிரவு(செப்.24) நடந்த கேபிள் கார் விபத்தில் ஏழு பௌத்த பிக்குகள்உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் ரஷ்ய பிக்கு ஒருவரும், ருமேனிய பிக்கு ஒருவரும் மற்றும்இந்திய பிக்கு ஒருவரும் அடங்குவதுடன் ஏனையோர் இலங்கையைச்சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

விபத்து நிகழ்ந்தபோது கேபிள் காரில் பயணித்த மொத்தம் 13 பிக்குகளில்இருவர் அதிலிருந்து குதித்து தப்பிய நிலையில், மேலும் நான்கு பிக்குகள்படுகாயமடைந்தனர்.

காயமடைந்த ஆறு பிக்குகளும் குருணாகலை போதனா வைத்தியசாலையில்சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Share this Article