சிறுவர்களுக்கெதிரான வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் எனும் தொனிப் பொருளில், கிளிநொச்சி நகரப் பகுதியில் World Vision நிறுவனத்தினால் ஏற்பாடு செய் யப்பட்ட சிறுவர் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு,கடந்த 26 முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி மத்திய கல்லூரி முன்றலில் காலை 9. 00 மணியளவில் ஆரம்பமான மேற்படி விழிப்புணர்வு ஊர்வலம், கிளிநொச்சி சேவைச் சந்தையைச் சென்றடைத்தது.
மேற்படி பேரணியில் கலந்து கொண்டவர்கள்,சிறுவர் உரிமைகள் தொடர்பான பதாதைகளை எந்திச்சென்றனர்.
சேவைச் சந்தை வளாகத்தில் இடம்பெற்ற அரங்க நிகழ்வில்,கலாலயா கலையரங்கத்தினரால் சிறுவர் உரிமை தொடர்பான நாடகம் அரங்கேற்றப்பட்டதுடன், World Vision நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட சிறுவர்களின் உரிமைக்குரல் விழிப்புணர்வுப் பாடலும் வெளியிடப்பட்டது.
நிகழ்வில் மாவட்ட அர சாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், கரைச்சி பிரதேச செயலர் ஜெயகரன், கிளிநொச்சி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர், கிளிநொச்சி மாவட்ட தொற்றுநோயியல் வைத்திய அதிகாரி, கிளிநொச்சி பொலிஸ் நிலைய சமூக சேவைகள் பிரிவின் பொறுப்பதிகாரி, கிராம அலுவலர்கள், கிளிநொச்சி மத்திய கல்லூரி பிரதி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
World Vision (உலக தரி) சனம்) நிறுவனம் சிறுவர்களின் முழுமையான நல்வாழ்வை உறுதிப்படுத்துவதுடன், கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.