கிளிநொச்சி – இயக்கச்சியில் வீடு ஒன்றில் நேற்றுமுன் தினம் இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்தமை தொடர்பில் ஆசிரியை கைது.
பிளாஸ்ரிக் குண்டுகள் 2, கரும்புலி நாள் பதாதை 1, தொலைபேசி 1, மடிக்கணணி 1, டொங்குள் 1, இறுவெட்டு 1 மீட்பு.
குற்ற செயலுக்கு ஒத்துழைப்பு வழங்கியமை மற்றும் தடயப் பொருட்களை அழித்தமை தொடர்பாகவே பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர் முன்னாள் போரளி எனவும் ஜனநாயக போராளிகள் கட்சியில் செயற்பட்டு வந்ததாகவும் கைது செய்யப்பட்ட ஆசிரியை சட்ட ரீதியற்ற முறையில் அவருடன் திருமண வாழ்க்கையில் ஈடுபட்டு வந்ததாகவும் பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.