கிளிநொச்சி பாரதிபுரம் வித்தியாலயத்தில் கல்வி கற்ற மலையாளபுரத்தினை சேர்ந்த இரு சகோதரிகள் க.பொ.த உயர்தர பரிட்சையில் சித்தி பெற்று ஒருவர் பொறியியல் துறைக்கும் மற்றவர் சித்த மருத்துவ துறைக்கும் தெரிவாகியுள்ளார்
பாரதிபுரம் வித்தியாலயத்தில் கடந்த 2014ம் ஆண்டே உயர்தரம் ஆரம்பிக்கப்பட்து இப்பாடசாலையினை சுற்றி வசித்து வருகின்ற கிராம மக்கள் மிகவும் வறுமைக்கோட்டிற்குட்பட்ட மக்களாகவே காணப்படுகின்றனர். மலையாளபுரம் கிராமத்தில் இருந்து பாரதி வித்தியாலயத்தில் தரம் ஒன்று முதல் உயர்தரம் வரை கல்வி கற்று சகோதரிகள் இருவரும் சித்தி பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது.
மலையாளபுரத்தினை சேர்ந்த சகோதரிகளான ஜெயராஜ் உஷாஜினி பொறியியல் பீடத்திற்கும் ஜெயராஜ் ஜனார்த்தினி சித்த மருத்துவத் துறைக்கும் தெரிவாகியுள்ளனர்
மலையாளபுரத்தில் இருந்து ஒரு வைத்தியரும் பொறியிலாளரும் முதற்தடைவையாக தேர்வு செய்து செய்யப்பட்டிருப்பது அக்கிராம மக்களுக்கு மகிழ்ச்சினை ஏற்படுத்தியுள்ளது.
தந்தையார் கூலித்தொழில் செய்து வருவதோடு தற்போது மிக்ஷர் மரவள்ளி பெரியல் போன்ற சுயதொழிலினை மேற்கொண்டு அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தினைக் கொண்டே தனது பிள்ளைகளை கல்விகற்க வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.